குர்ஆன் 4:157 — பெண்கள்
மேலும் கடவுள்-ன் தூதரும், மேரியின் மகன் இயேசுவுமாகிய மெசையாஹ்வை நாங்கள் கொன்றோம், என்று கோரியதற்காகவும். உண்மையில், அவர்கள் ஒருபோதும் அவரைக் கொல்லவில்லை, அவர்கள் ஒருபோதும் அவரைச் சிலுவையில் அறையவுமில்லை - அவர்கள் செய்ததாக அவர்கள் எண்ணிக் கொள்ளுமாறு செய்யப்பட்டனர். இந்த விஷயத்தில் தர்க்கம் செய்யும் எல்லாப்பிரிவினரும் இப்பிரச்சனை குறித்து முழுக்க முழுக்க சந்தேகத்திலேயே உள்ளனர். அவர்கள் எந்த அறிவும் பெற்றிருக்கவில்லை; அவர்கள் யூகிக்க மட்டுமே செய்கின்றனர். மிக உறுதியாக அவர்கள் அவரை ஒரு போதும் கொல்லவில்லை.*
[4:156] நம்ப மறுத்துக் கொண்டிருப்பதற்காகவும், மேலும் மேரியைக் குறித்து ஒரு பெரும் பொய்யைக் கூறிக்கொண்டிருப்பதற்காகவும் (அவர்கள் தண்டிக்கப்படுகின்றனர்). இயேசுவின் * “உடலை” சிலுவையில் அறைதல்
[4:158] மாறாக, கடவுள் தன்னிடம் அவரை உயர்த்திக் கொண்டார்; கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.