Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:158 — பெண்கள்

மாறாக, கடவுள் தன்னிடம் அவரை உயர்த்திக் கொண்டார்; கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[4:157] மேலும் கடவுள்-ன் தூதரும், மேரியின் மகன் இயேசுவுமாகிய மெசையாஹ்வை நாங்கள் கொன்றோம், என்று கோரியதற்காகவும். உண்மையில், அவர்கள் ஒருபோதும் அவரைக் கொல்லவில்லை, அவர்கள் ஒருபோதும் அவரைச் சிலுவையில் அறையவுமில்லை - அவர்கள் செய்ததாக அவர்கள் எண்ணிக் கொள்ளுமாறு செய்யப்பட்டனர். இந்த விஷயத்தில் தர்க்கம் செய்யும் எல்லாப்பிரிவினரும் இப்பிரச்சனை குறித்து முழுக்க முழுக்க சந்தேகத்திலேயே உள்ளனர். அவர்கள் எந்த அறிவும் பெற்றிருக்கவில்லை; அவர்கள் யூகிக்க மட்டுமே செய்கின்றனர். மிக உறுதியாக அவர்கள் அவரை ஒரு போதும் கொல்லவில்லை.*

[4:159] வேதத்தை உடையவர்களில் ஒவ்வொருவரும் அவரது மரணத்திற்கு முன்பாக அவர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியமா யிருந்தது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், அவர்களுக்கெதிராக அவர் ஒரு சாட்சியாக இருப்பார்.