குர்ஆன் 4:17 — பெண்கள்
அறியாமையினால் பாவத்தில் விழுந்து விட்டு பின்னர் உடனே அதிலிருந்து வருந்தித்திருந்து பவர்களுடைய வருந்தித்திருந்துதலே கடவுள்-ஆல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. கடவுள் அவர்களுக்கு மீட்சி அளிக்கின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[4:16] விபச்சாரத்தில் ஈடுபட்ட இருவரும் தண்டிக்கப்பட வேண்டும்.* அவர்கள் வருந்தித்திருந்தி மேலும் சீர்திருத்திக் கொண்டால், நீங்கள் அவர்களை தனியாக விட்டுவிட வேண்டும். கடவுள் மீட்சியளிப்பவர், மிக்க கருணையாளர்.
[4:18] எவர்கள், மரணம் அவர்களிடம் வரும்வரை பாவங்கள் செய்துவிட்டு, பின்னர் “இப்போது நான் வருந்தித்திருந்துகின்றேன்” என்று கூறினால் அவர்களின் வருந்தித்திருந்துதல் ஏற்றுக் கொள்ளப்படாது. அன்றியும் நம்ப மறுப்பவர்களாகவே மரணிக்கின்றவர்களிடம் இருந்தும் அது ஏற்றுக் கொள்ளப்படாது. நாம் இவர்களுக்காக ஒரு வேதனை நிறைந்த தண்டனையை தயார் செய்து இருக்கின்றோம்.