Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:16 — பெண்கள்

விபச்சாரத்தில் ஈடுபட்ட இருவரும் தண்டிக்கப்பட வேண்டும்.* அவர்கள் வருந்தித்திருந்தி மேலும் சீர்திருத்திக் கொண்டால், நீங்கள் அவர்களை தனியாக விட்டுவிட வேண்டும். கடவுள் மீட்சியளிப்பவர், மிக்க கருணையாளர்.

[4:15] உங்களுக்கிடையே உள்ள பெண்களில் எவரேனும் விபச்சாரம் செய்கின்றார்கள் எனில் அவர்களுக்கு எதிராக கண்டிப்பாக உங்களில் இருந்தே நான்கு சாட்சிகள் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு சாட்சியம் அளித்தால் அது போன்ற பெண்களை நீங்கள் அவர்கள் மரணிக்கும் வரை அல்லது கடவுள் அவர்களுக்கு ஒரு வழியை உருவாக்கும் வரை அவர்களுடைய* வீடுகளிலேயே தடுத்து வைத்து இருக்க வேண்டும்.

[4:17] அறியாமையினால் பாவத்தில் விழுந்து விட்டு பின்னர் உடனே அதிலிருந்து வருந்தித்திருந்து பவர்களுடைய வருந்தித்திருந்துதலே கடவுள்-ஆல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. கடவுள் அவர்களுக்கு மீட்சி அளிக்கின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.