குர்ஆன் 4:15 — பெண்கள்
உங்களுக்கிடையே உள்ள பெண்களில் எவரேனும் விபச்சாரம் செய்கின்றார்கள் எனில் அவர்களுக்கு எதிராக கண்டிப்பாக உங்களில் இருந்தே நான்கு சாட்சிகள் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு சாட்சியம் அளித்தால் அது போன்ற பெண்களை நீங்கள் அவர்கள் மரணிக்கும் வரை அல்லது கடவுள் அவர்களுக்கு ஒரு வழியை உருவாக்கும் வரை அவர்களுடைய* வீடுகளிலேயே தடுத்து வைத்து இருக்க வேண்டும்.
[4:14] எவரொருவர் கடவுளையும் அவருடைய தூதரையும் கீழ்ப்படியாமலும், அவருடைய சட்டங்களை மீறியும் நடக்கிறாரோ, அவரை நரகத்தில் சேர்ப்பார், அதில் அவன் என்றென்றும் தங்குவான். அவன் ஒரு வெட்கக்கேடான பிரதிபலனை அடைந்தான்.
[4:16] விபச்சாரத்தில் ஈடுபட்ட இருவரும் தண்டிக்கப்பட வேண்டும்.* அவர்கள் வருந்தித்திருந்தி மேலும் சீர்திருத்திக் கொண்டால், நீங்கள் அவர்களை தனியாக விட்டுவிட வேண்டும். கடவுள் மீட்சியளிப்பவர், மிக்க கருணையாளர்.