குர்ஆன் 4:14 — பெண்கள்
எவரொருவர் கடவுளையும் அவருடைய தூதரையும் கீழ்ப்படியாமலும், அவருடைய சட்டங்களை மீறியும் நடக்கிறாரோ, அவரை நரகத்தில் சேர்ப்பார், அதில் அவன் என்றென்றும் தங்குவான். அவன் ஒரு வெட்கக்கேடான பிரதிபலனை அடைந்தான்.
[4:13] இவை கடவுள்-ன் சட்டங்கள் ஆகும். எவர்கள் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்படிகின்றார்களோ அவர்களை, அவர் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் பிரவேசிக்க செய்வார். அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப் பார்கள். இது மகத்தான மாபெரும் வெற்றியாகும்.
[4:15] உங்களுக்கிடையே உள்ள பெண்களில் எவரேனும் விபச்சாரம் செய்கின்றார்கள் எனில் அவர்களுக்கு எதிராக கண்டிப்பாக உங்களில் இருந்தே நான்கு சாட்சிகள் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு சாட்சியம் அளித்தால் அது போன்ற பெண்களை நீங்கள் அவர்கள் மரணிக்கும் வரை அல்லது கடவுள் அவர்களுக்கு ஒரு வழியை உருவாக்கும் வரை அவர்களுடைய* வீடுகளிலேயே தடுத்து வைத்து இருக்க வேண்டும்.