குர்ஆன் 4:13 — பெண்கள்
இவை கடவுள்-ன் சட்டங்கள் ஆகும். எவர்கள் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்படிகின்றார்களோ அவர்களை, அவர் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் பிரவேசிக்க செய்வார். அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப் பார்கள். இது மகத்தான மாபெரும் வெற்றியாகும்.
[4:12] உங்கள் மனைவியருக்கு குழந்தைகள் இல்லா திருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் நீங்கள் பாதியைப் பெறுவீர்கள். அவர்களுக்கு குழந்தை கள் இருந்தால் நீங்கள் நான்கில் ஒரு பங்கைப் பெறுவீர்கள். இவை அனைத்தையும் அவர்கள் ஏதேனும் உயில் விட்டுச் சென்று இருந்தால் அதையும், மேலும் எல்லா கடன்களையும் கொடுத்த பிறகுதான் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் விட்டுச் சென்றதில், உங்களுக்கு குழந்தைகள் இல்லாதிருந்தால் அவர்கள் நான்கில்-ஒரு பங்கைப் பெறுவார்கள். உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் அவர்கள் எட்டில் ஒரு பங்கைப் பெறுவார்கள். இவை அனைத்தையும் நீங்கள் ஏதேனும் உயில்விட்டுச் சென்றிருந்தால் அதையும் மேலும் எல்லா கடன்களையும் கொடுத்த பிறகுதான் நிறைவேற்ற வேண்டும். இறந்தவர் ஆணோ அல்லது பெண்ணோ தனி ஆளாக இருந்து அவருக்கு இரண்டு உடன் பிறப்புக்களை, ஆணோ அல்லது பெண்ணோ, விட்டுச் சென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் ஆறில்- ஒரு பங்கு உரிமையை பெறுவார்கள். ஒரு வேளை அதிகமான உடன் பிறப்புகள் இருந்தால், அப்போது அவர்கள் மூன்றில்-ஒரு பங்கை சமமாக பங்கிட்டுக் கொள்ளவேண்டும். இவை அனைத்தையும் ஏதேனும் உயில் விட்டுச் சென்று இருந்தால் அதையும் மேலும் எல்லாக் கடன்களையும் கொடுத்தபிறகுதான் நிறைவேற்ற வேண்டும். இதனால் எவரும் பாதிக்கப்படமாட்டார்கள். இது கடவுள் -ஆல் கட்டளையிடப்பட்ட ஒரு தீர்வாகும். கடவுள் எல்லாம் அறிந்தவர், இரக்கமுள்ளவர்.
[4:14] எவரொருவர் கடவுளையும் அவருடைய தூதரையும் கீழ்ப்படியாமலும், அவருடைய சட்டங்களை மீறியும் நடக்கிறாரோ, அவரை நரகத்தில் சேர்ப்பார், அதில் அவன் என்றென்றும் தங்குவான். அவன் ஒரு வெட்கக்கேடான பிரதிபலனை அடைந்தான்.