குர்ஆன் 4:170 — பெண்கள்
மனிதர்களே, உங்கள் இரட்சகரிடமிருந்து சத்தியத்துடன் தூதர் உங்களிடம் வந்துள்ளார். ஆகையால், உங்கள் சொந்த நலனிற்காக நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் நம்ப மறுத்துவிட்டால், பின்னர் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[4:169] நரகத்தின் பாதைக்குத்தவிர, அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். இதனைச் செய்வது கடவுள் -க்கு எளிதானதேயாகும்.
[4:171] வேதத்தையுடைய மக்களே, உங்களுடைய மார்க்கத்தின் வரம்புகளை மீறாதீர்கள், மேலும் கடவுள் ஐப் பற்றி உண்மையைத் தவிர எதையும் கூறாதீர்கள். மெசையாஹ்வும், மேரியின் மகனுமாகிய இயேசு கடவுள்-ன் ஒரு தூதராகவும், மேலும் மேரிக்கு அவர் அனுப்பிய அவரது வார்த்தையாகவும் மேலும் அவரிட மிருந்துள்ள ஒரு வெளிப்பாடாகவுமே இருந்தார். ஆகையால், நீங்கள் கடவுள்-ன் மீதும் மேலும் அவருடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். “திரித்துவம்” என்று நீங்கள் கூறக் கூடாது. உங்களுடைய சொந்த நலனிற்காக நீங்கள் இதிலிருந்து விலகிக் கொள்ளவேண்டும். கடவுள் தான் ஒரே ஒரு தெய்வம், அவர் துதிப்பிற்குரியவர்; ஒரு மகனை பெற்றிருப்பதை விட்டும் அவர் மிகவும் மகத்துவம் மிக்கவர். வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மற்றும் பூமியின் மேல் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியது. இரட்சகராகவும் மேலும் எஜமானராக வும் இருக்க கடவுள் போதுமானவர்.