Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:172 — பெண்கள்

மெசையாஹ்வானாலும் அன்றி, நெருக்கமான அந்த வானவர்களானாலும் கடவுள்-ன் அடியாராக இருப்பதை ஒரு போதும் ஏளனமாகக் கருத மாட்டார்கள். எவர்கள் அவரை வழிபடுதை ஏளனமாகக் கருதுகின்றார்களோ, மேலும் அடிபணிவதை விட்டும் மிகவும் அகந்தை கொள்கின்றார்களோ, அவர்கள் அனைவரையும் தனக்கு முன்பாக அவர் ஒன்று கூட்டுவார்.

[4:171] வேதத்தையுடைய மக்களே, உங்களுடைய மார்க்கத்தின் வரம்புகளை மீறாதீர்கள், மேலும் கடவுள் ஐப் பற்றி உண்மையைத் தவிர எதையும் கூறாதீர்கள். மெசையாஹ்வும், மேரியின் மகனுமாகிய இயேசு கடவுள்-ன் ஒரு தூதராகவும், மேலும் மேரிக்கு அவர் அனுப்பிய அவரது வார்த்தையாகவும் மேலும் அவரிட மிருந்துள்ள ஒரு வெளிப்பாடாகவுமே இருந்தார். ஆகையால், நீங்கள் கடவுள்-ன் மீதும் மேலும் அவருடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். “திரித்துவம்” என்று நீங்கள் கூறக் கூடாது. உங்களுடைய சொந்த நலனிற்காக நீங்கள் இதிலிருந்து விலகிக் கொள்ளவேண்டும். கடவுள் தான் ஒரே ஒரு தெய்வம், அவர் துதிப்பிற்குரியவர்; ஒரு மகனை பெற்றிருப்பதை விட்டும் அவர் மிகவும் மகத்துவம் மிக்கவர். வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மற்றும் பூமியின் மேல் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியது. இரட்சகராகவும் மேலும் எஜமானராக வும் இருக்க கடவுள் போதுமானவர்.

[4:173] நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவர் முழுமையாக வெகுமதி அளிப்பார், மேலும் அவருடைய அருளைக் கொண்டு அவர்கள் மேல் பொழிவார். வெறுப்படைந்தும் மேலும் ஆணவங்கொண்டும் திரும்பியவர்களைப் பொறுத்தவரை அவர் அவர்களை வலி மிகுந்த தண்டனைக்கு உள்ளாக்குவார். அவர்கள் கடவுள்-ஐத் தவிர எந்த இரட்சகரையோ, அன்றி மீட்பவரையோ காணமாட்டார்கள்.