குர்ஆன் 4:173 — பெண்கள்
நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவர் முழுமையாக வெகுமதி அளிப்பார், மேலும் அவருடைய அருளைக் கொண்டு அவர்கள் மேல் பொழிவார். வெறுப்படைந்தும் மேலும் ஆணவங்கொண்டும் திரும்பியவர்களைப் பொறுத்தவரை அவர் அவர்களை வலி மிகுந்த தண்டனைக்கு உள்ளாக்குவார். அவர்கள் கடவுள்-ஐத் தவிர எந்த இரட்சகரையோ, அன்றி மீட்பவரையோ காணமாட்டார்கள்.
[4:172] மெசையாஹ்வானாலும் அன்றி, நெருக்கமான அந்த வானவர்களானாலும் கடவுள்-ன் அடியாராக இருப்பதை ஒரு போதும் ஏளனமாகக் கருத மாட்டார்கள். எவர்கள் அவரை வழிபடுதை ஏளனமாகக் கருதுகின்றார்களோ, மேலும் அடிபணிவதை விட்டும் மிகவும் அகந்தை கொள்கின்றார்களோ, அவர்கள் அனைவரையும் தனக்கு முன்பாக அவர் ஒன்று கூட்டுவார்.
[4:174] மனிதர்களே, உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு சான்று வந்துள்ளது. உங்களுக்கு ஆழ்ந்ததோர் வழிகாட்டியை நாம் இறக்கி அனுப்பியுள்ளோம்.