குர்ஆன் 4:174 — பெண்கள்
மனிதர்களே, உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு சான்று வந்துள்ளது. உங்களுக்கு ஆழ்ந்ததோர் வழிகாட்டியை நாம் இறக்கி அனுப்பியுள்ளோம்.
[4:173] நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவர் முழுமையாக வெகுமதி அளிப்பார், மேலும் அவருடைய அருளைக் கொண்டு அவர்கள் மேல் பொழிவார். வெறுப்படைந்தும் மேலும் ஆணவங்கொண்டும் திரும்பியவர்களைப் பொறுத்தவரை அவர் அவர்களை வலி மிகுந்த தண்டனைக்கு உள்ளாக்குவார். அவர்கள் கடவுள்-ஐத் தவிர எந்த இரட்சகரையோ, அன்றி மீட்பவரையோ காணமாட்டார்கள்.
[4:175] எவர்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் அவரை உறுதியாகப்பற்றிக் கொள்கின்றார்களோ அவர்களை அவர் தன்னுடைய கருணை மற்றும் கிருபையினுள் நுழையச் செய்வார், மேலும், அவர்களைத் தன்பால் ஒரு நேரான பாதையில் வழி நடத்துவார்.