Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:23 — பெண்கள்

(திருமணம் செய்து கொள்ள) உங்களுக்கு தடுக்கப்பட்டவர்கள், உங்களுடைய தாயார்கள், உங்களுடைய மகள்கள், உங்களுடைய சகோ தரிகள், உங்களுடைய தந்தையர்களின் சகோ தரிகள், உங்களுடைய தாயார்களின் சகோ தரிகள், உங்களுடைய சகோதரரின் மகள்கள், உங்களுடைய சகோதரியின் மகள்கள், உங்களுக்கு பாலூட்டிய தாய்மார்கள், உங்களு க்கு பாலூட்டிய தாய்மார்களால் பாலூட்டப்பட்ட பெண்கள், உங்களுடைய மனைவிகளின் தாயார்கள், எவரோடு நீங்கள் திருமண உறவை ஏற்படுத்திக் கொண்டீர்களோ, அந்த மனைவி யரின் மகள்கள், ஆனால் திருமண உறவை எற்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் அந்த மகளை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். மேலும் உங்களுக்குப் பிறந்த மகன்களை திருமணம் செய்திருந்த பெண்களும் உங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளனர். மேலும் நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளை திருமணம் செய்து கொள்வதும் கூடாது - ஆனால் இவ்வாறு முன்னரே நடந்திருந்தால் அந்த திருமணங்களை முறிக்க வேண்டாம். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[4:22] உங்கள் தந்தைமார்கள் ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள் - ஏனெனில் அது ஒரு மிகப்பெரிய குற்றமாகும், மேலும் வெறுக்கத்தக்க செயலாகும்-ஏற்கனவே நடந்து விட்ட திருமணங்களுக்கு விதி விலக்கு உண்டு, மேலும் அந்த திருமணங்களை முறித்து விடக் கூடாது.

[4:24] இன்னும் ஏற்கனவே திருமணம் ஆன பெண்கள், உங்களுடன்* போரிடும் அவர்களுடைய நம்பமறுக்கும் கணவர்களை விட்டு விட்டு புகலிடம் தேடி உங்களிடம் வந்தாலேயன்றி அவர்களை திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டு ள்ளது. இவை உங்களுக்கு கடவுள்-ன் கட்டளைகள் ஆகும். மற்ற அனைத்து வகையினரையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வரதட்சணைகளை கொடுத்து திருமணம் செய்து கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் விபச்சாரம் செய்யாமல் உங்களுடைய நல்லொழுக்கத்தைப் பேணிக் கொள்ளுங்கள். இவ்விதமாக, அவர்களில் எவரை நீங்கள் விரும்புகின்றீர்களோ அவர் களுக்கு தீர்மானிக்கப்பட்ட வரதட்சணையை அவர்களிடம் கொடுத்து விட வேண்டும். நீங்கள் ஒருவருக் கொருவர் ஒப்புக் கொண்டு வரதட்சணையில் அனுசரித்துச் செல்வதில் தவறில்லை. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.