குர்ஆன் 4:22 — பெண்கள்
உங்கள் தந்தைமார்கள் ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள் - ஏனெனில் அது ஒரு மிகப்பெரிய குற்றமாகும், மேலும் வெறுக்கத்தக்க செயலாகும்-ஏற்கனவே நடந்து விட்ட திருமணங்களுக்கு விதி விலக்கு உண்டு, மேலும் அந்த திருமணங்களை முறித்து விடக் கூடாது.
[4:21] அவர்கள் உங்களிடம் முறைப்படி வாக்குறுதி பெற்று நீங்கள் ஒருவருக்கொருவர் அந்தரங்க மாக வாழ்ந்து விட்ட பிறகு அதை நீங்கள் எப்படி திரும்ப எடுத்துக் கொள்ள இயலும்.?
[4:23] (திருமணம் செய்து கொள்ள) உங்களுக்கு தடுக்கப்பட்டவர்கள், உங்களுடைய தாயார்கள், உங்களுடைய மகள்கள், உங்களுடைய சகோ தரிகள், உங்களுடைய தந்தையர்களின் சகோ தரிகள், உங்களுடைய தாயார்களின் சகோ தரிகள், உங்களுடைய சகோதரரின் மகள்கள், உங்களுடைய சகோதரியின் மகள்கள், உங்களுக்கு பாலூட்டிய தாய்மார்கள், உங்களு க்கு பாலூட்டிய தாய்மார்களால் பாலூட்டப்பட்ட பெண்கள், உங்களுடைய மனைவிகளின் தாயார்கள், எவரோடு நீங்கள் திருமண உறவை ஏற்படுத்திக் கொண்டீர்களோ, அந்த மனைவி யரின் மகள்கள், ஆனால் திருமண உறவை எற்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் அந்த மகளை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். மேலும் உங்களுக்குப் பிறந்த மகன்களை திருமணம் செய்திருந்த பெண்களும் உங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளனர். மேலும் நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளை திருமணம் செய்து கொள்வதும் கூடாது - ஆனால் இவ்வாறு முன்னரே நடந்திருந்தால் அந்த திருமணங்களை முறிக்க வேண்டாம். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.