குர்ஆன் 4:45 — பெண்கள்
وَاللَّهُ أَعلَمُ بِأَعدائِكُم ۚ وَكَفىٰ بِاللَّهِ وَلِيًّا وَكَفىٰ بِاللَّهِ نَصيرًا
உங்களுடைய எதிரிகள் யார் என்று கடவுள்-க்கு மிகவும் நன்றாக தெரியும். கடவுள்- மட்டுமே ஒரே இரட்சகரும் மேலும் எஜமானருமாவார். கடவுள்-மட்டுமே ஒரே ஆதரவாளர் ஆவார்.
[4:44] வேதத்தின் ஒரு பகுதியைப் பெற்றவர்கள், எவ்வாறு வழிகேட்டை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதையும் மேலும் நீங்கள் பாதையில் இருந்து வழிதவற வேண்டும் என்று விரும்புவதையும் நீர் கவனித்திருக்கின்றீரா?
[4:46] யூதர்களாக உள்ளவர்களில் சிலர் உண்மைக்குப் புறம்பாக வார்த்தைகளை சிதைக்கின்றார்கள். மேலும் அவர்கள் “நாங்கள் கேட்டுக் கொண்டோம், ஆனால் கீழ்படிய மாட்டோம்” மேலும் “உங்களுடைய வார்த்தைகள் செவிட்டு காதுகளின் மேல் விழுகின்றன,” மேலும் மார்க்கத்தை பரிகசிப்பதற்காக அவர்களுடைய நாக்குகளை சுழித்து “ராயினா”* (எங்களுடைய மேய்ப்பராக இரும்) என்று கூறுகின்றார்கள். அவர்கள் “நாங்கள் கேட்கின்றோம் மேலும் நாங்கள் கீழ்படிகின்றோம்” என்றும் மேலும் “நாங்கள் உங்களைச் செவியேற்கின்றோம்” மேலும் “உன்ளுர்னா” (எங்களை கண்காணிப் பீராக) என்றும் கூறியிருந்தால் அவர்களுக்கு அது சிறந்ததாகவும் மேலும் அதிக நன்னெறியான தாகவும் இருந்திருக்கும். அதற்கு பதிலாக அவர்களுடைய நம்பிக்கையின்மையால் அவர்கள் கடவுள்-இடமிருந்து தண்டனைக் குள்ளானார்கள். அதன் விளைவாக அவர்களில் பெரும்பான்மையானவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.