Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:65 — பெண்கள்

உமது இரட்சகர் மீது ஆணையாக, அவர்கள் தங்களுடைய சச்சரவுகளில் தீர்ப்பு கூறுமாறு உம்மிடத்திலே வந்து, பின்னர் உம்முடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வதில், தங்களுடைய உள்ளங்களில் எவ்விதமான தயக்கத்தையும் காணாதவரை உண்மையில் அவர்கள் ஒருபோதும் நம்பிக்கையாளர்கள் அல்ல. அவர்கள் முற்றிலுமானதொரு அடிபணிதலாக அடிபணிந்தாக வேண்டும்.

[4:64] கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்க கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாமல் எந்த தூதரையும் நாம் அனுப்பவில்லை. அவர்கள் தங்களுடைய ஆன்மாக்களுக்கு தவறிழைத்த நிலையில் உம்மிடம் வந்து மேலும் பாவமன்னிப் பிற்காக கடவுள்-இடம் பிரார்த்தனை செய் திருந்து மேலும் தூதரும் அவர்கள் பாவமன்னிப் பிற்காக பிரார்த்தனை செய்திருந்தால், அவர்கள் கடவுள்-ஐ மீட்சியளிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் கண்டிருப்பார்கள்.

[4:66] “நீங்கள் உங்கள் உயிர்களை அர்ப்பணிக்க வேண்டும்” அல்லது, “உங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற வேண்டும்” என்று நாம் அவர் களுக்கு கட்டளையிட்டிருந்தால் அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அதைச் செய்திருக்க மாட்டார்கள் (அவ்வாறு ஒரு கட்டளை கொடுக்கப் பட்டிருந்தாலும்) அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருந்தார்களோ அதை அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்கு மிகச்சிறந்ததாக இருந்திருக்கும். மேலும் அவர்களுடைய விசுவாசத்தின் வலிமையை நிரூபித்திருக்கும்.