குர்ஆன் 4:64 — பெண்கள்
وَما أَرسَلنا مِن رَسولٍ إِلّا لِيُطاعَ بِإِذنِ اللَّهِ ۚ وَلَو أَنَّهُم إِذ ظَلَموا أَنفُسَهُم جاءوكَ فَاستَغفَرُوا اللَّهَ وَاستَغفَرَ لَهُمُ الرَّسولُ لَوَجَدُوا اللَّهَ تَوّابًا رَحيمًا
கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்க கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாமல் எந்த தூதரையும் நாம் அனுப்பவில்லை. அவர்கள் தங்களுடைய ஆன்மாக்களுக்கு தவறிழைத்த நிலையில் உம்மிடம் வந்து மேலும் பாவமன்னிப் பிற்காக கடவுள்-இடம் பிரார்த்தனை செய் திருந்து மேலும் தூதரும் அவர்கள் பாவமன்னிப் பிற்காக பிரார்த்தனை செய்திருந்தால், அவர்கள் கடவுள்-ஐ மீட்சியளிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் கண்டிருப்பார்கள்.
[4:63] அவர்களின் ஆழ்மனதின் எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார். நீர் அவர்களை புறக்கணிக்கவும், அவர்களுக்கு தெளிவாக விளக்கவும், மேலும் அவர்களுடைய ஆன்மாக்களை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கவும் வேண்டும்.
[4:65] உமது இரட்சகர் மீது ஆணையாக, அவர்கள் தங்களுடைய சச்சரவுகளில் தீர்ப்பு கூறுமாறு உம்மிடத்திலே வந்து, பின்னர் உம்முடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வதில், தங்களுடைய உள்ளங்களில் எவ்விதமான தயக்கத்தையும் காணாதவரை உண்மையில் அவர்கள் ஒருபோதும் நம்பிக்கையாளர்கள் அல்ல. அவர்கள் முற்றிலுமானதொரு அடிபணிதலாக அடிபணிந்தாக வேண்டும்.