குர்ஆன் 4:63 — பெண்கள்
أُولٰئِكَ الَّذينَ يَعلَمُ اللَّهُ ما فى قُلوبِهِم فَأَعرِض عَنهُم وَعِظهُم وَقُل لَهُم فى أَنفُسِهِم قَولًا بَليغًا
அவர்களின் ஆழ்மனதின் எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார். நீர் அவர்களை புறக்கணிக்கவும், அவர்களுக்கு தெளிவாக விளக்கவும், மேலும் அவர்களுடைய ஆன்மாக்களை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கவும் வேண்டும்.
[4:62] அவர்கள் செய்த செயல்களின் விளைவாக அவர்களை ஒரு பேரழிவு தாக்கும் போது அது எவ்வாறு இருக்கும்? அப்போது அவர்கள் உம்மிடம் வந்து, “எங்களுடைய எண்ணங்கள் நல்லதாகவும் மேலும் நன்னெறியானதாகவும் இருந்தது!” என்று கடவுள் மீது சத்தியம் செய்வார்கள் .
[4:64] கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்க கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாமல் எந்த தூதரையும் நாம் அனுப்பவில்லை. அவர்கள் தங்களுடைய ஆன்மாக்களுக்கு தவறிழைத்த நிலையில் உம்மிடம் வந்து மேலும் பாவமன்னிப் பிற்காக கடவுள்-இடம் பிரார்த்தனை செய் திருந்து மேலும் தூதரும் அவர்கள் பாவமன்னிப் பிற்காக பிரார்த்தனை செய்திருந்தால், அவர்கள் கடவுள்-ஐ மீட்சியளிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் கண்டிருப்பார்கள்.