குர்ஆன் 4:76 — பெண்கள்
நம்பிக்கை கொண்டவர்கள் கடவுள்-ன் பாதையில் போரிடுகின்றார்கள், அதேசமயம் நம்ப மறுப்பவர்களோ கொடுங்கோன்மைக்காக போரிடுகின்றார்கள். ஆகையால், நீங்கள் சாத்தானுடைய கூட்டாளிகளோடு போரிடுங்கள்; சாத்தானின் சக்தி ஒன்றும் இல்லாதது.
[4:75] “எங்களுடைய இரட்சகரே, கொடுங்கோன்மை யான மக்களாக இருக்கும் இந்த சமூகத்தை விட்டு எங்களை வெளியேற்றுவீராக. மேலும் நீரே எங்களுடைய இரட்சகராகவும் மேலும் எஜமானராகவும் இருப்பீராக,” என்று பலவீனமான ஆண்களும், பெண்களும், மற்றும் குழந்தைகளும் இறைஞ்சிப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் போது கடவுள்-ன் பாதையில் ஏன் நீங்கள் சண்டையிடக் கூடாது?
[4:77] “நீங்கள் சண்டையிட வேண்டியதில்லை;நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பதும் மேலும் கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுப்பதுமே” என்று கூறப்பட்டவர்களிடம், பின்னர், சண்டையிடும்படி அவர்களுக்கு கட்டளையிடப்பட்டபோது, அவர்கள் கடவுள்-க்கு அஞ்சுவது போல் மக்களுக்கு அவர்கள் அஞ்சியதை, அல்லது அதை விடவும் அதிகமாக அஞ்சியதை நீர் கவனித்திருக்கின்றீரா? அவர்கள் “எங்கள் இரட்சகரே, ஏன் இந்த சண்டையை எங்கள் மீது கட்டாயப் படுத்தினீர்? நீர் மட்டும் எங்களுக்குச் சிறிது காலம் ஓய்வளித்திருந்தால்,” என்று கூறினார்கள். “இந்த உலகின் பொருட்கள் ஒன்றுமில்லை, அதே சமயம் நன்னெறியாளர்களுக்கு மறுவுலகம் மிகவும் சிறந்தது, மேலும் நீங்கள் ஒருபோதும் சிறிதளவும் அநீதத்தையும் அனுபவிக்கமாட்டீர்கள்” என்று கூறுவீராக.