குர்ஆன் 4:75 — பெண்கள்
“எங்களுடைய இரட்சகரே, கொடுங்கோன்மை யான மக்களாக இருக்கும் இந்த சமூகத்தை விட்டு எங்களை வெளியேற்றுவீராக. மேலும் நீரே எங்களுடைய இரட்சகராகவும் மேலும் எஜமானராகவும் இருப்பீராக,” என்று பலவீனமான ஆண்களும், பெண்களும், மற்றும் குழந்தைகளும் இறைஞ்சிப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் போது கடவுள்-ன் பாதையில் ஏன் நீங்கள் சண்டையிடக் கூடாது?
[4:74] மறுவுலகிற்காக இவ்வுலகைத் துறந்தவர்களே கடவுள்-க்காக சண்டையிடத் தயாராக இருப் பார்கள். எவரொருவர் கடவுள்-ன் காரணமாக சண்டையிட்டு அதன்பிறகு கொல்லப்பட்டாலோ அல்லது வெற்றியை அடைந்தாலோ அவருக்கு நாம் நிச்சயமாக ஒரு சிறந்த வெகுமதியை வழங்குவோம்.
[4:76] நம்பிக்கை கொண்டவர்கள் கடவுள்-ன் பாதையில் போரிடுகின்றார்கள், அதேசமயம் நம்ப மறுப்பவர்களோ கொடுங்கோன்மைக்காக போரிடுகின்றார்கள். ஆகையால், நீங்கள் சாத்தானுடைய கூட்டாளிகளோடு போரிடுங்கள்; சாத்தானின் சக்தி ஒன்றும் இல்லாதது.