குர்ஆன் 4:74 — பெண்கள்
மறுவுலகிற்காக இவ்வுலகைத் துறந்தவர்களே கடவுள்-க்காக சண்டையிடத் தயாராக இருப் பார்கள். எவரொருவர் கடவுள்-ன் காரணமாக சண்டையிட்டு அதன்பிறகு கொல்லப்பட்டாலோ அல்லது வெற்றியை அடைந்தாலோ அவருக்கு நாம் நிச்சயமாக ஒரு சிறந்த வெகுமதியை வழங்குவோம்.
[4:73] ஆனால் கடவுள்-இடமிருந்து ஒரு அருட் கொடையை நீங்கள் அடைந்தால், உங்களுக்கும், அவர்களுக்குமிடையில் இதற்கு முன்னர் ஒரு போதும் நட்புறவே இல்லாதிருந்தது போல் அவர்கள் “நான் அவர்களோடு இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன், அதன்படி இத்தகைய ஒரு பெரிய வெற்றியில் பங்கெடுத்திருக்க இயலும்” என்று கூறியிருப்பார்கள்.
[4:75] “எங்களுடைய இரட்சகரே, கொடுங்கோன்மை யான மக்களாக இருக்கும் இந்த சமூகத்தை விட்டு எங்களை வெளியேற்றுவீராக. மேலும் நீரே எங்களுடைய இரட்சகராகவும் மேலும் எஜமானராகவும் இருப்பீராக,” என்று பலவீனமான ஆண்களும், பெண்களும், மற்றும் குழந்தைகளும் இறைஞ்சிப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் போது கடவுள்-ன் பாதையில் ஏன் நீங்கள் சண்டையிடக் கூடாது?