குர்ஆன் 4:73 — பெண்கள்
ஆனால் கடவுள்-இடமிருந்து ஒரு அருட் கொடையை நீங்கள் அடைந்தால், உங்களுக்கும், அவர்களுக்குமிடையில் இதற்கு முன்னர் ஒரு போதும் நட்புறவே இல்லாதிருந்தது போல் அவர்கள் “நான் அவர்களோடு இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன், அதன்படி இத்தகைய ஒரு பெரிய வெற்றியில் பங்கெடுத்திருக்க இயலும்” என்று கூறியிருப்பார்கள்.
[4:72] நிச்சயமாக, தங்களுடைய கால்களைப் பின் இழுத்துக் கொள்பவர்களும் உங்கள் மத்தியில் இருக்கின்றார்கள், பின்னர், ஒரு பின்னடைவு உங்களை துன்புறுத்தும்போது, அவர்கள் “கடவுள் எனக்கு அருள் பாலித்ததால் நம்பிக்கைக்காக உயிரிழந்த அவர்களோடு நான் கொல்லப் படவில்லை,” என்று கூறியிருப்பார்கள்.
[4:74] மறுவுலகிற்காக இவ்வுலகைத் துறந்தவர்களே கடவுள்-க்காக சண்டையிடத் தயாராக இருப் பார்கள். எவரொருவர் கடவுள்-ன் காரணமாக சண்டையிட்டு அதன்பிறகு கொல்லப்பட்டாலோ அல்லது வெற்றியை அடைந்தாலோ அவருக்கு நாம் நிச்சயமாக ஒரு சிறந்த வெகுமதியை வழங்குவோம்.