Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:95 — பெண்கள்

நம்பிக்கையாளர்களுக்கிடையில் ஊனம் ஏதும் இல்லாத நிலையில், சரீர உழைப்பு செய்யாதவர் களும், மேலும் கடவுள்-ன் பாதையில் தங்களுடைய பணத்தையும் மற்றும் தங்களுடைய வாழ்வையும் கொண்டு பாடுபடுவோரும் சமமாக மாட்டார்கள். தங்களுடைய செல்வம் மற்றும் தங்களுடைய வாழ்வைக் கொண்டு பாடுபடுவோரை, சரீர உழைப்பு செய்யாதவர்களுக்கு மேலாக, கடவுள் உயர்த்துகின்றார். அவர்கள் இருவருக்கும் கடவுள் மீட்சியை வாக்களிக்கின்றார், ஆனால் கடவுள் உண்மையாக உழைப்பவர்களை சரீர உழைப்பில்லாதவர்களுக்கு மேலாக ஒரு சிறந்த வெகுமதி கொண்டு உயர்த்துகின்றார்.

[4:94] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-ன் பாதையில் தாக்கினால், நீங்கள் முற்றிலும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களிடம் ஒருவர் சமாதானத்தைக் கோரினால் இந்த உலகத்தின் வெகுமதிகளைத் தேடியவர்களாக, “நீர் ஒரு நம்பிக்கையாளர் அல்ல” என்று கூறாதீர்கள். ஏனெனில் கடவுள் எண்ணற்ற வெகுமதிகளைக் கொண்டவராக இருக்கின்றார். நீங்களும் அவர்களைப் போன்றேதான் இருந்தீர்கள் மேலும் கடவுள் உங்களுக்கு அருள்புரிந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் (தாக்குவதற்கு முன்னால்) முற்றிலும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[4:96] உன்னதமான அந்தஸ்துகளும், அத்துடன் மன்னிப்பும், கருணையும், அவரிடமிருந்தே வருகின்றன. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.