Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:96 — பெண்கள்

உன்னதமான அந்தஸ்துகளும், அத்துடன் மன்னிப்பும், கருணையும், அவரிடமிருந்தே வருகின்றன. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[4:95] நம்பிக்கையாளர்களுக்கிடையில் ஊனம் ஏதும் இல்லாத நிலையில், சரீர உழைப்பு செய்யாதவர் களும், மேலும் கடவுள்-ன் பாதையில் தங்களுடைய பணத்தையும் மற்றும் தங்களுடைய வாழ்வையும் கொண்டு பாடுபடுவோரும் சமமாக மாட்டார்கள். தங்களுடைய செல்வம் மற்றும் தங்களுடைய வாழ்வைக் கொண்டு பாடுபடுவோரை, சரீர உழைப்பு செய்யாதவர்களுக்கு மேலாக, கடவுள் உயர்த்துகின்றார். அவர்கள் இருவருக்கும் கடவுள் மீட்சியை வாக்களிக்கின்றார், ஆனால் கடவுள் உண்மையாக உழைப்பவர்களை சரீர உழைப்பில்லாதவர்களுக்கு மேலாக ஒரு சிறந்த வெகுமதி கொண்டு உயர்த்துகின்றார்.

[4:97] தங்களுடைய ஆன்மாக்களுக்கு அநியாயம் செய்து கொண்டிருக்கும் நிலையில் உள்ளவர் களுடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் வேளையில், அந்த வானவர்கள் அவர்களிடம் “உங்களுக்கு என்னவாயிற்று?” என்று கேட்பார்கள். அவர்கள், “பூமியில் நாங்கள் கொடுமைப்படுத்தப்பட்டோம்,” என்று கூறுவார்கள். அவர்கள், நீங்கள் “அவ்விடத்திலிருந்து வேறு இடத்திற்குச் சென்று குடியேறும் அளவிற்குக் கடவுள்-உடைய பூமி போதுமான அளவு விசாலமானதாக இருக்கவில்லையா?” என்று கேட்பார்கள். இவர்களுக்கு இறுதி வசிப்பிடம் நரகமேயாகும், மேலும் இது ஒரு துக்ககரமான விதியாகும்.