குர்ஆன் 40:10 — மன்னிப்பவர்
நம்ப மறுப்பவர்களிடம், “ உங்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் சொந்த வெறுப்பை விடவும் உங்கள் மீது கடவுள் கொண்டுள்ள வெறுப்பு மிகவும் அதிகமானதாகும். ஏனெனில் நம்பிக்கை கொள்ளுமாறு நீங்கள் அழைக்கப் பட்டீர்கள், ஆனால் நீங்கள் நம்பமறுப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள்” என்று கூறப்படும்.
[40:9] “மேலும் பாவங்களில் வீழ்வதிலிருந்தும் அவர் களைப் பாதுகாப்பீராக. பாவங்களில் வீழ்வதி லிருந்து நீர் பாதுகாக்கும் எவரும், அந்நாளில், உம்மிடமிருந்து கருணையை அடைந்து விட்டார். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.”
[40:11] அவர்கள், “ எங்கள் இரட்சகரே, நீர் எங்களை இருமுறை மரணத்தில்* ஆழ்த்தினீர். மேலும் இரண்டு வாழ்வுகளை எங்களுக்குக் கொடுத் தீர்; இப்போது நாங்கள் எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டு விட்டோம். இதிலிருந்து வெளியேற ஏதேனும் வழி உண்டா?” என்று கூறுவார்கள்.