குர்ஆன் 40:9 — மன்னிப்பவர்
“மேலும் பாவங்களில் வீழ்வதிலிருந்தும் அவர் களைப் பாதுகாப்பீராக. பாவங்களில் வீழ்வதி லிருந்து நீர் பாதுகாக்கும் எவரும், அந்நாளில், உம்மிடமிருந்து கருணையை அடைந்து விட்டார். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.”
[40:8] “எங்கள் இரட்சகரே, மேலும் அவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களிலும், வாழ்க் கைத் துணைகளிலும், மற்றும் பிள்ளைகளிலும் உள்ள நன்னெறியாளர்களுக்கும், நீர் வாக்களித்த ஏதேன் தோட்டங்களுக்குள் அவர்களை அனுமதிப்பீராக. நீர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[40:10] நம்ப மறுப்பவர்களிடம், “ உங்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் சொந்த வெறுப்பை விடவும் உங்கள் மீது கடவுள் கொண்டுள்ள வெறுப்பு மிகவும் அதிகமானதாகும். ஏனெனில் நம்பிக்கை கொள்ளுமாறு நீங்கள் அழைக்கப் பட்டீர்கள், ஆனால் நீங்கள் நம்பமறுப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள்” என்று கூறப்படும்.