Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:8 — மன்னிப்பவர்

“எங்கள் இரட்சகரே, மேலும் அவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களிலும், வாழ்க் கைத் துணைகளிலும், மற்றும் பிள்ளைகளிலும் உள்ள நன்னெறியாளர்களுக்கும், நீர் வாக்களித்த ஏதேன் தோட்டங்களுக்குள் அவர்களை அனுமதிப்பீராக. நீர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[40:7] அரியாசனப் பணிபுரிபவர்களும் அதனைச் சூழ்ந்து இருப்பவர்களும் தங்களுடைய இரட்ச கரைத் துதித்துக் கொண்டும், புகழ்ந்து கொண்டும் இருக்கின்றனர், மேலும் அவர் மீது நம்பிக்கை கொள்கின்றனர். மேலும் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கேட்கின்றனர்: “எங்கள் இரட்சகரே, உமது கருணையும் மற்றும் உமது அறிவும் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்துள்ளது. பாவங்களுக்காக வருந்தித்திருந்தி மேலும் உம்முடைய பாதையைப் பின்பற்றுபவர்களை மன்னிப்பீராக, மேலும் நரகத்தின் தண்டனையிலிருந்து அவர்களை விலக்கிடுவீராக.

[40:9] “மேலும் பாவங்களில் வீழ்வதிலிருந்தும் அவர் களைப் பாதுகாப்பீராக. பாவங்களில் வீழ்வதி லிருந்து நீர் பாதுகாக்கும் எவரும், அந்நாளில், உம்மிடமிருந்து கருணையை அடைந்து விட்டார். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.”