Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:7 — மன்னிப்பவர்

الَّذينَ يَحمِلونَ العَرشَ وَمَن حَولَهُ يُسَبِّحونَ بِحَمدِ رَبِّهِم وَيُؤمِنونَ بِهِ وَيَستَغفِرونَ لِلَّذينَ ءامَنوا رَبَّنا وَسِعتَ كُلَّ شَيءٍ رَحمَةً وَعِلمًا فَاغفِر لِلَّذينَ تابوا وَاتَّبَعوا سَبيلَكَ وَقِهِم عَذابَ الجَحيمِ

அரியாசனப் பணிபுரிபவர்களும் அதனைச் சூழ்ந்து இருப்பவர்களும் தங்களுடைய இரட்ச கரைத் துதித்துக் கொண்டும், புகழ்ந்து கொண்டும் இருக்கின்றனர், மேலும் அவர் மீது நம்பிக்கை கொள்கின்றனர். மேலும் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கேட்கின்றனர்: “எங்கள் இரட்சகரே, உமது கருணையும் மற்றும் உமது அறிவும் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்துள்ளது. பாவங்களுக்காக வருந்தித்திருந்தி மேலும் உம்முடைய பாதையைப் பின்பற்றுபவர்களை மன்னிப்பீராக, மேலும் நரகத்தின் தண்டனையிலிருந்து அவர்களை விலக்கிடுவீராக.

[40:6] இவ்விதமாக, உம் இரட்சகரின் தீர்ப்பு, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள் என்று நம்ப மறுப் பவர்கள் மீது ஏற்கெனவே முத்திரையிடப் பட்டுள்ளது.

[40:8] “எங்கள் இரட்சகரே, மேலும் அவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களிலும், வாழ்க் கைத் துணைகளிலும், மற்றும் பிள்ளைகளிலும் உள்ள நன்னெறியாளர்களுக்கும், நீர் வாக்களித்த ஏதேன் தோட்டங்களுக்குள் அவர்களை அனுமதிப்பீராக. நீர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.