குர்ஆன் 40:17 — மன்னிப்பவர்
அந்நாளில், ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது சம்பாதித்தவற்றிற்கான கூலி கொடுக்கப்படும். அந்நாளில் எந்த அநீதியும் இருக்காது. கடவுள் கணக்கெடுப்பதில் மிகத் திறன் வாய்ந்தவர்.
[40:16] அதுதான் ஒவ்வொருவரும் முற்றிலும் வெளிப் படுத்தப்படுகின்ற நாளாகும்; அவர்களில் எவரும் கடவுள்-இடமிருந்து எந்த ஒன்றையும் மறைக்க முடியாது. ஆட்சியதிகாரம் அனைத் தும் அந்நாளில் எவருக்குரியது? ஒருவரும், மேலான அதிகாரமுடையவருமான, கடவுள் - க்கு.
[40:18] சமீபத்திலிருக்கும் அந்த நாளைப் பற்றி அவர் களை எச்சரிப்பீராக, அப்போது இதயங்கள் திகிலடைந்து விடும், மேலும் ஏராளமானோர் குற்றம் உணர்ந்ததால் ஏற்பட்ட வருத்தத்தில் இருப்பார்கள். வரம்பு மீறியவர்களுக்குக் கீழ்ப்படிய எந்த நண்பனோ அன்றிப் பரிந்துரையாளரோ இருக்க மாட்டார்கள்.