Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:16 — மன்னிப்பவர்

அதுதான் ஒவ்வொருவரும் முற்றிலும் வெளிப் படுத்தப்படுகின்ற நாளாகும்; அவர்களில் எவரும் கடவுள்-இடமிருந்து எந்த ஒன்றையும் மறைக்க முடியாது. ஆட்சியதிகாரம் அனைத் தும் அந்நாளில் எவருக்குரியது? ஒருவரும், மேலான அதிகாரமுடையவருமான, கடவுள் - க்கு.

[40:15] மிக உயர்ந்த அந்தஸ்துக்களைக் கொண்டவர், மேலும் முழு சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளர். ஒன்று கூட்டுகின்ற நாளைக் குறித்து எச்சரிப்பதற்காக, தன் அடியார்களிலிருந்து தான் தேர்ந்தெடுக்கும் எவருக்கும், தன்னுடைய கட்டளைகளைக் கொண்ட, உள்ளுணர்வை அவர் அனுப்புகின்றார்.

[40:17] அந்நாளில், ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது சம்பாதித்தவற்றிற்கான கூலி கொடுக்கப்படும். அந்நாளில் எந்த அநீதியும் இருக்காது. கடவுள் கணக்கெடுப்பதில் மிகத் திறன் வாய்ந்தவர்.