குர்ஆன் 40:27 — மன்னிப்பவர்
மோஸஸ், “ கணக்குக் கொடுக்கின்ற நாளின் மீது நம்பிக்கை கொள்ளாத ஆணவக்காரன் ஒவ்வொருவனிடமிருந்தும், என்னுடைய இரட்சகர் மற்றும் உங்களுடைய இரட்சகரிடம் நான் புகலிடம் தேடுகின்றேன்” என்று கூறினார்.
[40:26] ஃபேரோ, “என்னை, மோஸஸைக் கொல்ல விடுங்கள், மேலும் அவர் அவருடைய இரட்சகரை இறைஞ்சிப் பிரார்த்திக்கட்டும். அவர் உங்களுடைய மார்க்கத்தைப் பாழாக்கி விடுவார், அல்லது நாடு முழுவதும் தீமைகளைப் பரப்பி விடுவார் என்று நான் கவலைப்படுகின்றேன்” என்று கூறினான்.
[40:28] ஃபேரோவின் சமூகத்தாரிடையே, தன்னுடைய நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கை கொண்ட ஒரு மனிதர் கூறினார், “‘என் இரட்சகர் கடவுள் தான்,’ என்று கூறியதற்காக மட்டும் எப்படி ஒரு மனிதரை நீங்கள் கொலை செய்ய இயலும், மேலும் அவர் உங்கள் இரட்சகரிடமிருந்து தெளிவான சான்றுகளை உங்களுக்குக் காட்டியுள்ள போது? அவர் ஒரு பொய்யராக இருந்தால், அது அவருடைய பிரச்சனையாகும், மேலும் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் வாக்களித்தவற்றிலிருந்து நீங்கள் பயனடை வீர்கள். நிச்சயமாக, வரம்பு மீறுபவர்,பொய்யர் எவரையும் கடவுள் வழி நடத்த மாட்டார்.