Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:26 — மன்னிப்பவர்

ஃபேரோ, “என்னை, மோஸஸைக் கொல்ல விடுங்கள், மேலும் அவர் அவருடைய இரட்சகரை இறைஞ்சிப் பிரார்த்திக்கட்டும். அவர் உங்களுடைய மார்க்கத்தைப் பாழாக்கி விடுவார், அல்லது நாடு முழுவதும் தீமைகளைப் பரப்பி விடுவார் என்று நான் கவலைப்படுகின்றேன்” என்று கூறினான்.

[40:25] மேலும் அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களுக்குக் காட்டிய பொழுது, அவர்கள், “அவருடன் நம்பிக்கை கொண்டவர்களின் மகன்களைக் கொன்று விடுங்கள், மேலும் அவர்களுடைய மகள்களை விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். “இவ்விதமாக, நம்ப மறுப்பவர்களின் சூழ்ச்சிகள் எப்பொழுதும் தீயவையாகவே உள்ளன.

[40:27] மோஸஸ், “ கணக்குக் கொடுக்கின்ற நாளின் மீது நம்பிக்கை கொள்ளாத ஆணவக்காரன் ஒவ்வொருவனிடமிருந்தும், என்னுடைய இரட்சகர் மற்றும் உங்களுடைய இரட்சகரிடம் நான் புகலிடம் தேடுகின்றேன்” என்று கூறினார்.