Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:29 — மன்னிப்பவர்

“என் சமூகத்தாரே, இன்றைய தினம் அரசுரி மையும், மேலும் மேன்மையும் உங்களிடம் உள்ளது. ஆனால் கடவுள் - ன் தீர்ப்பு நம்மிடம் வந்து விட்டால், அதற்கு எதிராக நமக்கு உதவுபவர் யார்?” ஃபேரோ, “ நான் எதனை பொருத்தமெனக் காண்கின்றேனோ, அதனைப்பின்பற்ற வேண்டியவர்களாகத்தான் நீங்கள் இருக்கின்றீர்கள்; சரியான பாதையில் மட்டுமே நான் உங்களை வழிநடத்துவேன்” என்று கூறினான்.

[40:28] ஃபேரோவின் சமூகத்தாரிடையே, தன்னுடைய நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கை கொண்ட ஒரு மனிதர் கூறினார், “‘என் இரட்சகர் கடவுள் தான்,’ என்று கூறியதற்காக மட்டும் எப்படி ஒரு மனிதரை நீங்கள் கொலை செய்ய இயலும், மேலும் அவர் உங்கள் இரட்சகரிடமிருந்து தெளிவான சான்றுகளை உங்களுக்குக் காட்டியுள்ள போது? அவர் ஒரு பொய்யராக இருந்தால், அது அவருடைய பிரச்சனையாகும், மேலும் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் வாக்களித்தவற்றிலிருந்து நீங்கள் பயனடை வீர்கள். நிச்சயமாக, வரம்பு மீறுபவர்,பொய்யர் எவரையும் கடவுள் வழி நடத்த மாட்டார்.

[40:30] நம்பிக்கை கொண்ட அந்த ஒருவர் கூறினார், “என் சமூகத்தாரே, முந்திய எதிரிகளுக்கு நேரிட்டதைப் போன்ற அதே விதியை உங்களுக்கு நான் அஞ்சுகின்றேன்.