குர்ஆன் 40:30 — மன்னிப்பவர்
நம்பிக்கை கொண்ட அந்த ஒருவர் கூறினார், “என் சமூகத்தாரே, முந்திய எதிரிகளுக்கு நேரிட்டதைப் போன்ற அதே விதியை உங்களுக்கு நான் அஞ்சுகின்றேன்.
[40:29] “என் சமூகத்தாரே, இன்றைய தினம் அரசுரி மையும், மேலும் மேன்மையும் உங்களிடம் உள்ளது. ஆனால் கடவுள் - ன் தீர்ப்பு நம்மிடம் வந்து விட்டால், அதற்கு எதிராக நமக்கு உதவுபவர் யார்?” ஃபேரோ, “ நான் எதனை பொருத்தமெனக் காண்கின்றேனோ, அதனைப்பின்பற்ற வேண்டியவர்களாகத்தான் நீங்கள் இருக்கின்றீர்கள்; சரியான பாதையில் மட்டுமே நான் உங்களை வழிநடத்துவேன்” என்று கூறினான்.
[40:31] “நோவா, மேலும் ஆது, தமூது, மற்றும் அவர்களுக்குப் பின்னால் வந்த மற்றவர்களின் எதிரிகள். மக்களுக்கு அநியாயம் எதையும் கடவுள் விரும்புவதில்லை.