Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:42 — மன்னிப்பவர்

“கடவுள்-க்கு நன்றி கெட்டவனாகும்படியும், மேலும் நான் அறியாத இணைத் தெய்வங்களை அவருடன் அமைத்துக் கொள்ளும்படியும் என்னை நீங்கள் அழைக்கின்றீர்கள். நான் உங்களை, சர்வ வல்லமையுடையவர், மன்னிப்பவரின் பால் அழைக்கின்றேன்.

[40:41] “ என் சமூகத்தாரே, காப்பாற்றப்படுவதற்காக உங்களை நான் அழைக்கும் அதே சமயம், நரக நெருப்பின் பால் என்னை நீங்கள் அழைக் கின்றீர்கள்.

[40:43] “எதைச் செய்யும்படி என்னை நீங்கள் அழைக்கின்றீர்களோ அதற்கு இவ்வுலகிலும், அன்றி மறுவுலகிலும் எந்த அடிப்படையும் கிடையாது என்பதிலும், நம் இறுதித்திரும்புதல் கடவுள்-இடமே என்பதிலும், மேலும் வரம்பு மீறுபவர்கள் நரக நெருப்பிற்கு உள்ளாகி விட்டனர் என்பதிலும் சந்தேகமெதுவும் இல்லை.