குர்ஆன் 40:43 — மன்னிப்பவர்
“எதைச் செய்யும்படி என்னை நீங்கள் அழைக்கின்றீர்களோ அதற்கு இவ்வுலகிலும், அன்றி மறுவுலகிலும் எந்த அடிப்படையும் கிடையாது என்பதிலும், நம் இறுதித்திரும்புதல் கடவுள்-இடமே என்பதிலும், மேலும் வரம்பு மீறுபவர்கள் நரக நெருப்பிற்கு உள்ளாகி விட்டனர் என்பதிலும் சந்தேகமெதுவும் இல்லை.
[40:42] “கடவுள்-க்கு நன்றி கெட்டவனாகும்படியும், மேலும் நான் அறியாத இணைத் தெய்வங்களை அவருடன் அமைத்துக் கொள்ளும்படியும் என்னை நீங்கள் அழைக்கின்றீர்கள். நான் உங்களை, சர்வ வல்லமையுடையவர், மன்னிப்பவரின் பால் அழைக்கின்றேன்.
[40:44] “ இப்போது நான் உங்களிடம் கூறுவதை என்றே னும் ஒரு நாள் நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள். இவ்விஷயத்தின் தீர்ப்பை நான் கடவுள்-இடம் விட்டு விடுகின்றேன்; மக்கள் அனைவரையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.”