குர்ஆன் 40:51 — மன்னிப்பவர்
மிகவும் நிச்சயமாக, நம் தூதர்களுக்கும் மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், இவ்வுலகம் மற்றும் சாட்சிகள் வரவழைக்கப்படும் அந்த நாள் ஆகிய இரண்டிலும், நாம் வெற்றியைத் தருவோம்.
[40:50] அவர்கள், “தெளிவான தூதுச் செய்தியை உங்களிடம் ஒப்படைத்த உங்களுடைய தூதர் களை நீங்கள் பெறவில்லையா?” என்று கூறு வார்கள். அவர்கள், “ ஆம் நாங்கள் பெற்றோம்” என்று பதிலளிப்பார்கள். அவர்கள், “ பின்னர் (நீங்கள் விரும்பிய அளவு) இறைஞ்சிப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்; நம்ப மறுப்பவர்களின் இறைஞ்சுதல் எப்பொழுதும் வீணானதேயாகும்“ என்று கூறுவார்கள்.
[40:52] அந்நாளில், நம்ப மறுப்பவர்களின் மன்னிப்புக் கோருதல்கள் அவர்களுக்குப் பயனளிக்காது. அவர்கள் தண்டித்தலுக்குள்ளாகி விட்டனர்; அவர்கள் மோசமான விதிக்கு உள்ளாகி விட்டனர்.