குர்ஆன் 40:78 — மன்னிப்பவர்
உமக்கு முன்னரும் தூதர்களை நாம் அனுப்பியுள்ளோம்-அவர்களில் சிலரை நாம் உமக்கு கூறியுள்ளோம், மேலும் சிலரை நாம் உமக்கு கூறவில்லை. எந்தத் தூதரும் கடவுள்-ன் அங்கீகாரமின்றி* எந்த அற்புதத்தையும் உருவாக்க முடியாது. கடவுள்-ன் தீர்ப்பு வெளியிடப்பட்டவுடன், சத்தியம் மேலோங்கும், மேலும் பொய்யர்கள் வெளிப்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தப்படுவார்கள்.
[40:77] நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும், ஏனெனில் கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமான தாகும். அவர்களுக்கு நாம் வாக்களித்துள்ள (தண்டனையை) உமக்கு நாம் காட்டினாலும், அல்லது அதற்கு முன்னரே உம்முடைய வாழ்க்கையை முடித்துவிட்டாலும், அவர்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.
[40:79] கடவுள் தான் உங்களுக்காகக் கால்நடை களைப் படைத்தவர்;சிலவற்றில் நீங்கள் சவாரி செய்கின்றீர்கள், மேலும் சிலவற்றை நீங்கள் உண்ணுகின்றீர்கள்.