Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:10 — விவரிக்கப்பட்டது

அவர் அதன் மீது நிலைப்படுத்துபவைகளை (மலைகள்) அமைத்தார், அதனை விளை விக்கக் கூடியதாக ஆக்கினார், மேலும் அதில் வசிப்பவர்கள் அனைவருடைய தேவை களையும் பூர்த்தி செய்யும் பொருட்டு, நான்கு நாட்களில் அதன் வாழ்வாதாரங்களை அவர் கணக்கிட்டார்.

[41:9] “பூமியை இரண்டு நாட்களில்* படைத்த அந்த ஒருவரை நீங்கள் நம்ப மறுக்கின்றீர்கள், மேலும் அவரே பிரபஞ்சத்தின் இரட்சகராக இருக்கின்ற போதிலும், அவருடன் சமமாக்க, இணைத் தெய்வங்களை நீங்கள் அமைத்துக் கொள்கின்றீர்கள்” என்று கூறுவீராக.

[41:11] பின்னர் அவர் வானத்தின் பால் திரும்பிய போது, அதுவரை அது வாயுவாகவே இருந்தது, மேலும் அதனிடமும் பூமியிடமும்,“விருப்பத்துடனோ அல்லது விருப்பமில்லாமலோ, வாழ்வு நிலைக்குள் வாருங்கள்” என்று கூறினார். அவை, “விருப்பத்துடனே நாங்கள் வரு கின்றோம்” என்று கூறின.