குர்ஆன் 41:11 — விவரிக்கப்பட்டது
பின்னர் அவர் வானத்தின் பால் திரும்பிய போது, அதுவரை அது வாயுவாகவே இருந்தது, மேலும் அதனிடமும் பூமியிடமும்,“விருப்பத்துடனோ அல்லது விருப்பமில்லாமலோ, வாழ்வு நிலைக்குள் வாருங்கள்” என்று கூறினார். அவை, “விருப்பத்துடனே நாங்கள் வரு கின்றோம்” என்று கூறின.
[41:10] அவர் அதன் மீது நிலைப்படுத்துபவைகளை (மலைகள்) அமைத்தார், அதனை விளை விக்கக் கூடியதாக ஆக்கினார், மேலும் அதில் வசிப்பவர்கள் அனைவருடைய தேவை களையும் பூர்த்தி செய்யும் பொருட்டு, நான்கு நாட்களில் அதன் வாழ்வாதாரங்களை அவர் கணக்கிட்டார்.
[41:12] இவ்விதமாக, அவர்* இரண்டு நாட்களில் ஏழு பிரபஞ்சங்களை முழுமைப்படுத்தினார், மேலும் ஒவ்வொரு பிரபஞ்சத்திற்கும் உரிய விதிகளை அமைத்தார். மேலும் நாம்* மிகக்கீழான பிரபஞ்சத்தை விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம், மேலும் அதனைச் சுற்றிப் பாதுகாவலர்களை அமைத்தோம். சர்வ வல்லமையுடையவரான, எல்லாம் அறிந்தவரின் வடிவமைப்பு இவ்விதமானதாகும்.