குர்ஆன் 41:12 — விவரிக்கப்பட்டது
இவ்விதமாக, அவர்* இரண்டு நாட்களில் ஏழு பிரபஞ்சங்களை முழுமைப்படுத்தினார், மேலும் ஒவ்வொரு பிரபஞ்சத்திற்கும் உரிய விதிகளை அமைத்தார். மேலும் நாம்* மிகக்கீழான பிரபஞ்சத்தை விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம், மேலும் அதனைச் சுற்றிப் பாதுகாவலர்களை அமைத்தோம். சர்வ வல்லமையுடையவரான, எல்லாம் அறிந்தவரின் வடிவமைப்பு இவ்விதமானதாகும்.
[41:11] பின்னர் அவர் வானத்தின் பால் திரும்பிய போது, அதுவரை அது வாயுவாகவே இருந்தது, மேலும் அதனிடமும் பூமியிடமும்,“விருப்பத்துடனோ அல்லது விருப்பமில்லாமலோ, வாழ்வு நிலைக்குள் வாருங்கள்” என்று கூறினார். அவை, “விருப்பத்துடனே நாங்கள் வரு கின்றோம்” என்று கூறின.
[41:13] அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், அப் போது, “‘ஆது மற்றும் தமூது ஆகியோரை அழித்த பேரழிவைப் போன்றதொரு பேரழிவைப் பற்றி உங்களை நான் எச்சரிக்கின்றேன்” என்று கூறுவீராக.