குர்ஆன் 41:13 — விவரிக்கப்பட்டது
அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், அப் போது, “‘ஆது மற்றும் தமூது ஆகியோரை அழித்த பேரழிவைப் போன்றதொரு பேரழிவைப் பற்றி உங்களை நான் எச்சரிக்கின்றேன்” என்று கூறுவீராக.
[41:12] இவ்விதமாக, அவர்* இரண்டு நாட்களில் ஏழு பிரபஞ்சங்களை முழுமைப்படுத்தினார், மேலும் ஒவ்வொரு பிரபஞ்சத்திற்கும் உரிய விதிகளை அமைத்தார். மேலும் நாம்* மிகக்கீழான பிரபஞ்சத்தை விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம், மேலும் அதனைச் சுற்றிப் பாதுகாவலர்களை அமைத்தோம். சர்வ வல்லமையுடையவரான, எல்லாம் அறிந்தவரின் வடிவமைப்பு இவ்விதமானதாகும்.
[41:14] “நீங்கள் கடவுள்-ஐத் தவிர வழிபாடு செய்யக் கூடாது,” என்று கூறியவர்களாக, அவர் களிடமும், அவ்வாறே அவர்களுக்கு முன்ன ரும் அவர்களுக்குப் பின்னரும், அவர்க ளுடைய தூதர்கள் அவர்களிடம் சென்றனர். அவர்கள், “எங்கள் இரட்சகர் நாடியிருந்தால், வானவர்களை அவர் அனுப்பியிருக்க இயலும். நீங்கள் கூறுபவற்றின் மீது நாங்கள் நம்பிக்கை அற்றவர்கள் ஆவோம்” என்று கூறினார்கள்.