Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:14 — விவரிக்கப்பட்டது

“நீங்கள் கடவுள்-ஐத் தவிர வழிபாடு செய்யக் கூடாது,” என்று கூறியவர்களாக, அவர் களிடமும், அவ்வாறே அவர்களுக்கு முன்ன ரும் அவர்களுக்குப் பின்னரும், அவர்க ளுடைய தூதர்கள் அவர்களிடம் சென்றனர். அவர்கள், “எங்கள் இரட்சகர் நாடியிருந்தால், வானவர்களை அவர் அனுப்பியிருக்க இயலும். நீங்கள் கூறுபவற்றின் மீது நாங்கள் நம்பிக்கை அற்றவர்கள் ஆவோம்” என்று கூறினார்கள்.

[41:13] அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், அப் போது, “‘ஆது மற்றும் தமூது ஆகியோரை அழித்த பேரழிவைப் போன்றதொரு பேரழிவைப் பற்றி உங்களை நான் எச்சரிக்கின்றேன்” என்று கூறுவீராக.

[41:15] ‘ஆதைப் பொறுத்த வரை, அவர்கள் பூமியின் மீது ஆணவம் கொண்டார்கள், சத்தியத்தை எதிர்த்தார்கள், மேலும், “நம்மை விட வலிமை மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள். அவர்களைப் படைத்தவரான கடவுள், அவர்களை விடவும் வலிமை மிக்கவர் என்பதை, அவர்கள் புரிந்து கொள்ளவில் லையா? அவர்கள் நமது வெளிப்பாடுகளைப் போற்றாதவர்களாக இருந்தனர்.