Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:16 — விவரிக்கப்பட்டது

அதன் விளைவாக, ஒரு சில துன்பகரமான நாட்களுக்கு, உக்கிரமான காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பினோம். இவ்விதமாக நாம் இழிவு தரும் தண்டனையைக் கொண்டு இந்த வாழ்க்கையில் அவர்களை துன்புறுத்தினோம், மேலும் மறுவுலகின் தண்டனையோ இன்னும் அதிகமான இழிவு தருவதாகும்; அவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.

[41:15] ‘ஆதைப் பொறுத்த வரை, அவர்கள் பூமியின் மீது ஆணவம் கொண்டார்கள், சத்தியத்தை எதிர்த்தார்கள், மேலும், “நம்மை விட வலிமை மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள். அவர்களைப் படைத்தவரான கடவுள், அவர்களை விடவும் வலிமை மிக்கவர் என்பதை, அவர்கள் புரிந்து கொள்ளவில் லையா? அவர்கள் நமது வெளிப்பாடுகளைப் போற்றாதவர்களாக இருந்தனர்.

[41:17] தமூதைப் பொறுத்த வரை, நாம் அவர்களுக்கு வழிகாட்டலை வழங்கினோம், ஆனால் அவர் கள் வழிகாட்டலுக்கு மேலாக குருட்டுத் தனத்தையே விரும்பி எடுத்துக் கொண்டனர். அதன் விளைவாக, அவர்கள் சம்பாதித் தவற்றின் காரணத்தால், பேரழிவும் மேலும் இழிவு நிறைந்த தண்டனையும் அவர்களை அழித்தது.