குர்ஆன் 41:17 — விவரிக்கப்பட்டது
தமூதைப் பொறுத்த வரை, நாம் அவர்களுக்கு வழிகாட்டலை வழங்கினோம், ஆனால் அவர் கள் வழிகாட்டலுக்கு மேலாக குருட்டுத் தனத்தையே விரும்பி எடுத்துக் கொண்டனர். அதன் விளைவாக, அவர்கள் சம்பாதித் தவற்றின் காரணத்தால், பேரழிவும் மேலும் இழிவு நிறைந்த தண்டனையும் அவர்களை அழித்தது.
[41:16] அதன் விளைவாக, ஒரு சில துன்பகரமான நாட்களுக்கு, உக்கிரமான காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பினோம். இவ்விதமாக நாம் இழிவு தரும் தண்டனையைக் கொண்டு இந்த வாழ்க்கையில் அவர்களை துன்புறுத்தினோம், மேலும் மறுவுலகின் தண்டனையோ இன்னும் அதிகமான இழிவு தருவதாகும்; அவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.
[41:18] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களை நாம் எப்போதும் காப்பாற்றுகின்றோம்.