குர்ஆன் 41:28 — விவரிக்கப்பட்டது
கடவுள்-ன் விரோதிகளுக்காகக் காத் திருக்கும் கூலி இத்தகையதேயாகும். நரகம் தான் அவர்களுடைய நிரந்தரமான தங்குமிட மாக இருக்கும்; நம்முடைய வெளிப்பாடுகளைக் கைவிட்டதற்கான ஒரு நியாயமான கூலி.
[41:27] நிச்சயமாக நாம் இந்த நம்ப மறுப்பவர்களைக் கடுமையான தண்டனையைக் கொண்டு துன்புறுத்துவோம். நிச்சயமாக அவர்களுடைய தீய காரியங்களுக்குரிய கூலியை அவர் களுக்குத் திருப்பிக்கொடுப்போம்.
[41:29] நம்ப மறுப்பவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களை வழிதவறச் செய்த இரு வகையினரில் உள்ளவர்களையும் - ஜின்கள் மற்றும் மனிதர் கள் - அவர்களை எங்கள் பாதங்களுக்குக் கீழே போட்டு நாங்கள் நசுக்கி, மேலும் அவர் களை மிகக் கீழானவர்களாக ஆக்கி விடுவதற் காக, அவர்களை எங்களுக்குக் காட்டுவீராக” என்று கூறுவார்கள்.