குர்ஆன் 41:30 — விவரிக்கப்பட்டது
“கடவுள் தான் எங்கள் இரட்சகர்,” எனப் பிரகடனம் செய்து, பின்னர் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துகின்றவர்கள் மீது, வானவர்கள் இறங்குகின்றனர்: “நீங்கள் அச்சம் எதுவும் கொள்ள வேண்டாம், அன்றி நீங்கள் துக்கப்படவும் வேண்டாம். சுவனம் உங்களுக் காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற நற்செய்தியில் மகிழ்ச்சியடையுங்கள்.
[41:29] நம்ப மறுப்பவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களை வழிதவறச் செய்த இரு வகையினரில் உள்ளவர்களையும் - ஜின்கள் மற்றும் மனிதர் கள் - அவர்களை எங்கள் பாதங்களுக்குக் கீழே போட்டு நாங்கள் நசுக்கி, மேலும் அவர் களை மிகக் கீழானவர்களாக ஆக்கி விடுவதற் காக, அவர்களை எங்களுக்குக் காட்டுவீராக” என்று கூறுவார்கள்.
[41:31] “இந்த வாழ்விலும், மேலும் மறுவுலகிலும் நாங்கள் உங்களுடைய தோழர்களாக இருக்கின்றோம். அதிலே நீங்கள் ஆசைப்படும் எதுவும் உங்களுக்குக் கிடைக்கும்; உங் களுக்கு வேண்டிய எதுவும் உங்களுக்குக் கிடைக்கும்.