Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:39 — விவரிக்கப்பட்டது

நிலமானது அசைவற்று இருப்பதை நீர் காண்பதும், பின்னர் அதன் மீது நாம் தண்ணீரைக் கொண்டு பொழிந்தவுடன், அது உயிருடன் துளிர்ப்பதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். நிச்சயமாக, அதனை மீண்டும் உயிர்ப்பித்தவரால் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க இயலும். அவர் சர்வ சக்தியுடையவர்.

[41:38] இதனைச் செய்வதற்கு அவர்கள் மிகவும் ஆணவம் கொண்டவர்களாக இருந்தால், பின்னர் உம் இரட்சகரிடத்தில் இருப்பவர்கள், எப்பொழுதும் சோர்வடையாது இரவும் பகலும் அவரைத் துதிக்கின்றனர்.

[41:40] நிச்சயமாக, நம்முடைய வெளிப்பாடுகளைச் சிதைப்பவர்கள் நம்மிடமிருந்து மறைந்தவர் களாக இல்லை. நரகத்தில் வீசப்படுகின்ற ஒருவன் மேலானவனா, அல்லது மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று பாதுகாப்புடன் வருபவரா? நீங்கள் விரும்பிய எதையும் செய்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராக அவர் இருக்கின்றார்.