Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:38 — விவரிக்கப்பட்டது

இதனைச் செய்வதற்கு அவர்கள் மிகவும் ஆணவம் கொண்டவர்களாக இருந்தால், பின்னர் உம் இரட்சகரிடத்தில் இருப்பவர்கள், எப்பொழுதும் சோர்வடையாது இரவும் பகலும் அவரைத் துதிக்கின்றனர்.

[41:37] இரவும், பகலும், மேலும் சூரியனும், சந்திரனும் அவருடைய சான்றுகளில் உள்ளவைகளாகும். சூரியன் முன்னிலையிலோ, அன்றிச் சந்திரனுக் கோ சிரம் பணியாதீர்கள்; நீங்கள் உண்மை யாகவே அவரை மட்டும் வழிபடுபவர்களாக இருந்தால், அவற்றைப் படைத்த கடவுள்-ன் முன்னிலையில் தான் நீங்கள் சிரம்பணிந்து விழவேண்டும்.

[41:39] நிலமானது அசைவற்று இருப்பதை நீர் காண்பதும், பின்னர் அதன் மீது நாம் தண்ணீரைக் கொண்டு பொழிந்தவுடன், அது உயிருடன் துளிர்ப்பதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். நிச்சயமாக, அதனை மீண்டும் உயிர்ப்பித்தவரால் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க இயலும். அவர் சர்வ சக்தியுடையவர்.