குர்ஆன் 41:37 — விவரிக்கப்பட்டது
இரவும், பகலும், மேலும் சூரியனும், சந்திரனும் அவருடைய சான்றுகளில் உள்ளவைகளாகும். சூரியன் முன்னிலையிலோ, அன்றிச் சந்திரனுக் கோ சிரம் பணியாதீர்கள்; நீங்கள் உண்மை யாகவே அவரை மட்டும் வழிபடுபவர்களாக இருந்தால், அவற்றைப் படைத்த கடவுள்-ன் முன்னிலையில் தான் நீங்கள் சிரம்பணிந்து விழவேண்டும்.
[41:36] சாத்தான் உங்களிடம் ஒரு எண்ணத்தைக் கிசுகிசுத்தால், நீங்கள் கடவுள்-இடம் புகலிடம் தேட வேண்டும். அவர்தான் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[41:38] இதனைச் செய்வதற்கு அவர்கள் மிகவும் ஆணவம் கொண்டவர்களாக இருந்தால், பின்னர் உம் இரட்சகரிடத்தில் இருப்பவர்கள், எப்பொழுதும் சோர்வடையாது இரவும் பகலும் அவரைத் துதிக்கின்றனர்.