குர்ஆன் 41:46 — விவரிக்கப்பட்டது
நன்னெறியான காரியங்கள் புரிகின்ற எவராயினும், தன் சொந்த நலனிற்காகவே அவ்வாறு செய் கின்றார், மேலும் தீமைகளைப் புரிகின்ற எவராயினும் தனக்கே கேடாகத்தான் அவ்வாறு செய்கின்றார். உம்முடைய இரட்சகர் ஒரு போதும் மக்களின்பால் அநீதி இழைப்பவர் அல்ல.
[41:45] மோஸஸிற்கு நாம் வேதத்தைக் கொடுத்திருந் தோம், மேலும் அதுவும் தர்க்கிக்கப்பட்டது. உம்முடைய இரட்சகரின் முன்னரே தீர்மானிக்கப் பட்ட முடிவு இல்லாதிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்கள். உண்மையில், அவர்கள் மிகவும் அதிகமான சந்தேகங்களைக் கொன்டிருந்தனர்.
[41:47] அந்த நேரம் (உலகத்தின் முடிவு)* பற்றிய அறிவு அவரிடமே உள்ளது. அவருடைய அறிவு இல்லா மல், பழங்கள் எதுவும் அவற்றின் பாளைகளி லிருந்து வெளிவருவதில்லை, அன்றி எந்தப் பெண்ணும் கருத்தரிப்பதோ அல்லது பிரசவிப் பதோ இல்லை. அவர்களை அவர்: “என்னுடன் நீங்கள் அமைத்துக் கொண்ட அந்த இணைத் தெய்வங்கள் எங்கே?” என்று கேட்கின்ற அந்நாள் வரும். அவர்கள், “எங்களில் எவருமே அதற்குச் சாட்சி கூறுபவர்கள் இல்லை என்று நாங்கள் உம்மிடம் பிரகடனம் செய்கின்றோம்” என்று கூறுவார்கள்.